Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 11, 2021

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு.

2020-21 - ம் கல்வியாண்டில் 40 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பார்வையில் காணும் அரசாணையின் மூலம் ஆணை வழங்கப்பட்டுள்ளது . 

அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது அவசியமாகிறது . எனவே , அந்தந்த
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் அரசு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதுடன் எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் முதன்மைக்கல்வி அலுவலர்களால் ஆணை வழங்கப்படவேண்டும் அந்தந்த மாவட்டத்தில் காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் வழங்கக் கோரி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியரிடமிருந்து விண்ணப்பம் பெற்று இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் . 

மேலும் , மாறுதல் ஆணை வழங்குவதற்கான மாதிரி ஆணை இத்துடன் அனுப்பப்படுவதுடன் மாறுதல் பெற்ற தலைமையாசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment