Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 16, 2021

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தோட்டக்கலைத்துறை, மற்றும் வேளாண் அலுவலர்கள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.

தகுதிகள் : பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு குறைந்தது இரண்டு வருட பட்டயப் படிப்பு.

வேளாண் அலுவலர்கள் பதவிக்கு, இளங்கலை பட்டம். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பதவிக்கு முதுகலை பட்டம் அடிப்படைத் தகுதி
tnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலருக்கான தேர்வு ஏப்ரல் 17 ம் தேதி நடைபெறும். எஞ்சிய பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும். இந்த பணிச்சேர்க்கை மூலம் மொத்தம் 991 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நேர்காணல் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். இரண்டு தகுதி சுற்றிலும் வெற்றி பெற்றவர்கள், மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்படுவார்கள். மதிப்பெண்களின் அடிப்படையில் 991 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

காலி பணியிடங்கள் விவரம்:

தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் - 28

தோட்டக்கலை அதிகாரிகள் - 169

வேளாண் அதிகாரி - 365

உதவி வேளாண்மை அலுவலர்கள் - 122

உதவி தோட்டக்கலை அதிகாரிகள் - 307

No comments:

Post a Comment