JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
10-ம் தேதி வகுப்பு பொதுத்தேர்வு தேதி வரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.
முதல் மற்றும் 3-ம் வகுப்பு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் கூறினார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை எனவும், உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம் என கூறினார்.
கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
அதேபோல் பிப். 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் 10-ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment