Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 5, 2021

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் 14 கல்வி நிறுவனங்கள் தகுதி பட்டியில் உள்ளன. 

இந்திய கல்வி நிறுவனங்களில், ஐஐடி சென்னை முதல் இடத்தையும் (சர்வதேச தரவரிசை 30), ஐஐடி பம்பாய் (41) இரண்டாவது இடத்தையும், ஐஐடி கோரக்பூர் (44) மூன்றாவது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் (50) நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஐஐடி டெல்லி 10வது இடத்தில் உள்ளது. ஐஐடி சென்னையை பொருத்தமட்டில் பெட்ரோலிய பொறியியல் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்த சர்வதேச பட்டியலில் தேர்வாகி உள்ளது.

இதுகுறித்து குழுவின் மூத்த துணைத் தலைவர் பென் ஸ்வாட்டர் கூறுகையில், ‘மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தியுள்ளது. அதன் விளைவு சில மாதங்களில் தெரியும். தற்போதைக்கு இந்திய கல்வி நிறுவனங்களை பொருத்தமட்டில் கல்வி மற்றும் பாடத்திட்டத்தின் தரத்தில் சமரசம் செய்யவில்லை. அதனால் இந்தாண்டு தரவரிசையில் பாடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டில் 235 பாடங்கள் சேர்க்கப்பட்டன. அதேசமயம் இந்தாண்டு 233 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்திய கல்வி முறையின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவதற்கான மத்திய அரசின் குறிக்கோள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

No comments:

Post a Comment