Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 7, 2021

இரட்டணையில் 100 % வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

விழுப்புரம் மாவட்டம், இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு மற்றும் மனிதச் சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.

இவ்விழிப்புணர்வு பேரணியில், இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், திரு. மு. இராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி. ச. சாந்தி மற்றும் வட்டாட்சியர் திரு. செல்வம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும், தலைமை ஆசிரியர்கள் திரு. ஜி. இரவி, திருமதி ச. வனஜா அவர்களும், பெரியதச்சூர் காவல்நிலைய திரு. இலட்சுமணன், திரு. மாறன் அவர்களும், இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள், மயிலம் வட்டார வளமையப் பொருப்பாளர்கள், விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்ட பள்ளிகளின் பணிபுரியும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட் மற்றும் இதரப் பொருப்பாளர்கள், ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பு செய்தனர்.

இவ்விழிப்புணர்வு பேரணியில்,  தேர்தல் விழிப்புணர்வு துண்டு அறிக்கைகள் வழங்குதல்,  வாக்களித்தல் தொடர்பான முழக்கங்கள் எழுப்புதல், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாடல்கள் பாடுதல் முதலான செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டன.

No comments:

Post a Comment