Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 16, 2021

10,11,12 ஆம் வகுப்பு இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 - ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு , சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டுவருகிறது. மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில்நின்ற மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற ( Dropout ) மாணவ , மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021 க்குள் இவ்வியக்கக ' கே'பிரிவு ( Email ) முகவரிக்கு ( ksec.tndse@nic.in ) அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment