Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 10, 2021

10ம் வகுப்பு பருவ தேர்வு மதிப்பெண் நிர்ணயிக்க திட்டம்


கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப்பின், இந்தாண்டு ஜன., 19ல் திறக்கப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவங்கின. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு பொதுதேர்வு ரத்து செய்யப்படும் என, முதல்வர்பழனிசாமி அறிவித்தார்.

இதனால், மாணவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், எதன் அடிப்படையில், மதிப்பெண் எப்படி நிர்ணயிக்கப்படும் என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஏதாவது ஒரு தேர்வு நடத்தினால் மட்டுமே, மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயித்து, பிளஸ் 1 அல்லது பாலிடெக்னிக் உயர்கல்விக்கு மாணவர்களை அனுப்ப முடியும்.

இது குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட அளவிலான வினாத்தாளின் படி, மூன்றாம் பருவ தேர்வை மட்டும் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.நேற்று முன்தினம்முதல் இந்த தேர்வுகள் துவங்கின. மேலும், அறிவியல் பாடத்துக்கு, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. 

இந்த மதிப்பெண்களின் படி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment