அரசின் அறிவிப்பை மீறி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு செல்வதற்கும், 11-ம் வகுப்பில் பிரிவுகளைத் தேர்வு செய்ய ஏதுவாகவும், கற்றல் குறைபாட்டைப் போக்கவும் மாணவர்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் தேர்வு நடத்த மெட்ரிக் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இணைந்து ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு பொதுத்தேர்வு நடத்தவும் முடிவு செய்துள்ளன.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Thursday, March 4, 2021
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment