Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 18, 2021

ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா இருந்தால் நோய் கட்டுப்பாட்டு பகுதி.. அங்கு அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் : தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக விரிவான ஆய்வுக் கூட்டம் நேற்று பிற்பகல் (17.03.2021) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:

கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்துவதற்காக, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கெனவே உள்ள 761 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

தடுப்பூசி குப்பி ஏற்றவாறு நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடவும், தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

‘ரோட்டரி கிளப்’ போன்ற தடுப்பூசி பணிகளில் அனுபவம் மிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

·நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏற்கனவே செயல்படுத்தியவாறு, கூடுதலாக சுகூ-ஞஊசு பரிசோதனை எடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

·நோய் தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்து, நோய் தொற்று இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

·நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நோய் ஏற்பட காரணமாக இருக்கும் நபர்கள் மூன்றுக்கு மேல் இருந்தால், தற்போதுள்ள நடைமுறைப்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு தெருவில் அல்லது குடியிருப்புகளில் மூன்று நபர்களுக்கு மேல் நோய் தொற்று இருந்தால், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்கே உள்ளவர்களுக்கும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் பொது குழாய் இருக்கும் இடம், குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் தொட்டிகள், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாகத் தெரியும்படி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

·நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து செயலாக்க முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

கோவிட் கவனிப்பு மையங்களைப் பொறுத்தமட்டில், தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தலைமைச் செயலாளர் அவர்கள் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி, நோய் தொற்றுகள் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முனைவர் அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, திரு. ஜி. பிரகாஷ், இ.ஆ.ப., ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம், டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி, டாக்டர். ஜெகதீசன், நகர சுகாதார அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி, டாக்டர். நாராயணபாபு, இயக்குநர், மருத்துவக் கல்வி, டாக்டர். குருநாதன், இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், டாக்டர். வினய், இணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment