Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 14, 2021

அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் மேலும் 36 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை மேல்நிலைய பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 20 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 36 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை மேற்கொண்ட 200 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் சோவிந்த ராவ் அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவரை அடுத்து அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆய்வாளர்கள், அம்மாப்பேட்டை ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 20 பேரில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 16 பேர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment