Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 24, 2021

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்க வாய்ப்பு எனத் தகவல்

TN Board Exam 2021: கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் நலன்கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுக்குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன மூலம் தேர்வு (Online Exam) நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்ககப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தால், கடந்த வருடம் மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மத்திய அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் முழுவதும் தடை செய்யப்பட்டது. நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா தொற்று தக்கம் குறைந்து வந்ததால், 10 மாதங்களுக்கு பிறகு முதலில் 11, 12 ஆம் வகுப்புகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டன. அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு (Again Lockdown) உத்தரவு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக இரவு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி, 9, 10, 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி (All Pass) என தமிழக அரசு அறிவித்தது.

பின்னர் அரசு தரப்பில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கல்லூரிகளும் மூடப்பட்டன. அதாவது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், இனி வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறும் என்றும், அதேபோல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு (12th Class) மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொடர்ந்து வகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் நலன் கருதி +2 மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என்றும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும்வேளையில் தமிழக அரசு (TN Govt) என்ன முடிவெடுக்கப்போகிறது என மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளானர்.

No comments:

Post a Comment