Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 13, 2021

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் பங்கேற்பு: சனிக்கிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை

'தேர்தல் பயிற்சி வகுப்புக்கு ஆசிரியர்கள் செல்வதால், சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களை, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில், முதுகலை ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, நாளை (மார்ச், 14), நாமக்கல் மாவட்டத்தில், முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. மேலும், தேர்தல் நிறைவடையும் வரை வரக்கூடிய, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தேர்தல் பயிற்சி நடக்கும் என, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, திங்கள் முதல் சனி வரை, ஆறு நாட்களும் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களும், கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆறு நாட்கள் பள்ளியும், ஏழாவது நாளில், தேர்தல் பயிற்சி வகுப்பும் என, வாரத்தின், ஏழு நாட்களும் பணி நாளாக உள்ளதை, தாங்கள் கருத்தில் கொண்டு, இனி வரும் சனிக்கிழமைகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 

மேலும், சனிக்கிழமைகளில் விருப்பம் உள்ள முதுகலை ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன், வரும் சனிக்கிழமைகளில், முழுமையாக பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment