Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 13, 2021

மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் கூடிய டேப்லெட்

தமிழகத்தில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் கூடிய டேப்லெட் அரசு செலவில் கொடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் திருவுருவப்படம், மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டேன். இதன் தொடர்ச்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை உங்கள் முன்னால் வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பொதுவாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை 'தேர்தல் கதாநாயகன்' என்று சொல்வார்கள். நேற்றைய தினம் நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள்.

இன்றைய தினம் இரண்டாவது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன். தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் திருவுருவப்படம், மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டேன். இதன் தொடர்ச்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை உங்கள் முன்னால் வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.

பொதுவாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை 'தேர்தல் கதாநாயகன்' என்று சொல்வார்கள். நேற்றைய தினம் நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள். இன்றைய தினம் இரண்டாவது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்படும் வகையில் 4ஜி அல்லது 5ஜி கொண்ட மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் டேப்லெட் அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-fi வசதி செய்து கொடுக்கப்படும் என்றுள்ளார்.

No comments:

Post a Comment