Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 1, 2021

நெட்டி முறிக்காதீங்க.! "தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது".. பின் விளைவுகள்.!!!

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து சொடக்கு' எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை 'நெட்டி முறித்தல்', 'உடல் முறித்தல்' என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது,சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். "தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல'' என்கிறார் எலும்பு மருத்துவர்.

நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார் அவர்.விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே 'சைனோவியல்' (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது.

நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது.

தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது. 

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய நெட்டி முறித்தால், பிடி வலிமையின்றிப் போவது, முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.நெட்டி முறிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment