Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

உடற்பயிற்சியின்போது முகக்கவசம் அணிய வேண்டுமா?

தீவிர உடற்பயிற்சியின்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது மற்றும் கரோனா பரவல் அபாயத்தைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவின் தாக்கம் பல்வேறு பகுதிகளில் குறைந்தாலும் உலகின் ஒரு சில பகுதிகளில் வைரஸ் பரவல் இருந்துகொண்டே உள்ளது.

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய இரண்டும் கரோனாவைத் தடுக்கும் வழிகளாக அறியப்பட்டு மக்களிடையே வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

முகக்கவசம் அணிவதற்கும் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்து அவற்றின் தாக்கங்களை பட்டியலிட்டனர்.

அந்தவகையில் உடற்பயிற்சியின்போது உடல் உறுப்புகள் முழுவதும் இயங்குவதால் அந்த நேரத்தில் கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம் என்று பரிந்துரைக்கின்றனர் இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.

கரோனா வைரஸ் தொற்றுவதற்கான முக்கிய வழி சுவாசத்தில் உள்ள நீர்த்துளிகள். உடற்பயிற்சியின்போது அதிக சுவாசம் நிகழும் நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று எளிதாக உள்நுழையும். எனவே, உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணிவது வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும். அதேநேரத்தில் தீவிர உடற்பயிற்சியின்போது முகக்கவசம் அணிவதால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த சான்றுகள் இல்லை என்று கூறுகின்றனர்.

மேலும் இதுகுறித்த ஆய்வில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசத்தைவிட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் பாதுகாப்பானவை என்று கூறப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது சற்று கடினமாக இருந்ததாக பலர் தெரிவித்திருந்தாலும் வைரஸ் தொற்றின் அபாயத்தைக் குறைக்க முகக்கவசம் அணிவது அவசியம் என்று டாக்டர் மாபெல்லி கூறினார்.

No comments:

Post a Comment