Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 25, 2021

மருத்துவ, நர்சிங் படிப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மெடிக்கல் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் அனைத்து மருத்துவ மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment