Saturday, April 3, 2021

குரூப் 1 - தேர்வில் மெகா ஊழல்! தேர்வர்களை வஞ்சிக்கும் டிஎன்பிஎஸ்சி!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

குரூப்-1 தேர்வு முடிஞ்சி ரிசல்ட் விட்டாச்சு எல்லாம் வெறித்தனமா படிச்சிட்டு இருக்கானுங்க

இவனுங்க என்னடாணா தேவையில்லாத வேலைய பாத்துக்கிட்டு இருக்காங்க..

சரி கதைக்கு வருவோம் அதாவது 3.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் (deputy collector) உட்பட உயரிய பதவிக்கான TNPSC குரூப்-1 தேர்வு நடந்தது.இதில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது..அதில் 45 கேள்விகளுக்கு மேல் இதுவரை தவறு என ஆதாரத்துடன் உறுதிபட கண்டறியப்பட்டுள்ளது..

TNPSC தேர்வாணையம் 3/1/2021 யிக் நடந்து முடிந்த தேர்வுக்கு Tentative answers key வெளியிட்டது..இந்த

விடைகளுக்கு எதிராக தவறு இருப்பின் மாணவர்கள் 7-1-2021 முதல் 14-1-2021 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாணவர்கள் கீ சேலஞ்ச் செய்ய அறிவுறுத்தப்பட்டது..

பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தேர்வாணையத்தின் கேள்வித்தாளில் தவறுகளை சுட்டிக் காட்டினார்கள்..கீ சேலஞ்ச் செய்வதற்கு மிக அதிவேக இணைய தளம் தேவை ,கணினி போன்றவை இருந்தால் மட்டுமே நாம் சரியாக செய்ய முடியும்.ஏனென்றால் கீ சேலஞ்ச் செய்யும்பொழுது ஆதாரமாக புத்தகத்தின் பக்கங்களையும் அந்த புத்தகத்தை பற்றிய தகவலையும் இணைக்க வேண்டும் அதை பிடிஎஃப் வடிவில் மாற்றி அப்லோட் செய்ய வேண்டும்.கணினி அறிவும் சிறந்த இணையதளத்தில் தேடும் திறன் படைத்தவர்கள் மட்டுமே சரியான விடையை கண்டறிந்து தவறுகளை சுட்டிக் காட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ்நாட்டில் பல கிராமத்தில் இணையதள வசதி இல்லை என்பதும் தங்களுக்கு தெரியும் மேலும் பலர் சரியான கைப்பேசியும் வைத்திருப்பதில்லை என்பதை நினைவு கொள்ள விரும்புகிறேன்..

இணையதளத்தில் கீ சேலஞ்ச் செய்யும் போது கடைசி இரண்டு நாளில் சர்வர் குறைபாடு காரணமாக key challenge செய்யும் தகவல்கள் அப்லோடு ஆக மிகவும் காலதாமதம் ஆனது, சில தகவல்கள் பதிவேற்றவும் செய்ய முடியவில்லை, பல கேள்விகள் upload செய்ததற்கு TNPSC தரப்பில் acknowledgement சரியாக வரவில்லை..

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம் கேள்வித்தாள் தவறு என key challenge யில் சுட்டிக் காட்டுவதற்கு ஆதாரம் (acknowledgment) கொடுக்காமல் மறைப்பதும் ஒரு வித ஊழலின் ஆரம்பம் ..

மேலும் தொடர்ந்து வாசிக்க

7 நாள் மட்டுமே key challenge செய்ய வாய்ப்பு கொடுப்பதும் அதுவும் TNPSC server இணையதளத்தின் வேகத்தை முடக்கி வைத்ததும் மறைமுக ஊழல் வேலையை செய்து வருகிறது தெளிவாகிறது..

ஏன்டா டேய் படிச்சு பாஸ் பண்ண வக்கில்லை சரியான நேரத்தில பரிச்சஅ வச்சிருக்காங்க ரிசல்ட்டும் சீக்கிரமா வெளியிட்டு இருக்காங்க அப்புறம் கேள்வி தப்பு இருந்தா அதையும் கேள்வி கேட்க வாய்ப்பு கொடுத்திருக்காங்க இதைவிட ஒரு தேர்வாணையம் என்ன பண்ண முடியும்?

இதுவெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதை தெளிவாக இன்னும் விளக்குகிறேன்...

1.5 லட்சம் மேல் எழுதும் தேர்வில் Answer key challenge செய்தது 3716 பேர் மட்டுமே..அதனை வைத்து மட்டுமே TNPSC தேர்வு ஆணையம் தேர்வு முடிவை வெளியீட்டது..

மேலும் கவனிக்க

தேர்வர்கள் அப்லோட் செய்த ஆதாரங்களை வைத்து 11 பாடங்களில் மிக அறிவு பெற்ற 3 நபர் கமிட்டி ஆய்வு செய்தது.இவர்களுக்கு TNPSC EXPERT COMMITTEE என்று பெயர்..

TNPSC தேர்வுக்கு 8 அடிப்படைப் பாடங்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ள விரும்புகிறேன்..யார் அந்த 3 பேர் ,அவர்கள் சிறந்த ஞான ஒளி பெற்ற அந்த பதினோரு பாடம் எதுவென்று யாருக்கும் தெரியாது..

மேலும் தேர்வாணையம் சார்பில் 20-1-2021 முதல் 27-1 2021 வரை அந்த சிறப்பு எக்ஸ்பர்ட் கமிட்டி இறுதி விடைகள் உருவாக்கியது.அந்த இறுதி விடையின் படியே 9. 2.2020 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் preliminary தேர்வில் 45/200 தவறான கேள்வி கேட்டு இருந்தது..அதனை மறைக்க 4 கேள்விதான் தப்பு என கூறி tentative answer key வெளியிடப்பட்டது ..தேர்வு எழுதியவர்கள் tentative answer key யை அடிப்படையாக வைத்து டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் விடை தவறு என நிரூபித்து ஆதாரங்களை அனுப்பினார்கள்..ஆனால் தேர்வின் முடிவு என்பது tnpsc expert committee உருவாக்கிய FINAL answer key படியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதாவது 07/01/2021 அன்று வெளியிட்ட Tentative Keys படி இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை tnpsc expert committee உருவாக்கிய FINAL answer key படியே

9. 2.2020 அன்று தேர்வு முடிவுகள் வெளியிட்டது என தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது..இத்தகைய இறுதி final answer key ஆனது தேர்வுகள் முழுவதும் 3 கட்டம் முடிந்த பிறகு வெளியிடுவோம் என்று கூறப்படுகிறது...

கேள்வித்தாளில் ஏராளமான பிழைகள் இருப்பதை மறைக்க tentative answer key வெளியிடுகிறது..

அதனை எதிர்த்து கேள்விக் கேட்டால்

இந்த final answers key மற்றும் TNPSC EXPERT COMMITTEE என்ற பெரிய கண்துடைப்பு வேலையை சொல்லி தப்பித்து விடுகிறார்கள்..

EXPERT COMMITTEE முடிவே இறுதி என தெரிவிக்கும் தேர்வாணையம் FINAL answer key எப்பொழுது வெளியிட்டார்கள் என்ற தகவலை உங்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறேன்..

10/07/2015 நடந்த குரூப் 1 PRELIMS தேர்வுக்கு 11/11/2015 அன்று tentative answer key வெளியிட்டார்கள்..இன்னும் FINAL answer key இதுவரை வெளியிடவில்லை என்பதை கவனத்தில் கொள்க..

29/12/2013 நடந்த குரூப் 1 தேர்வுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து 09/01/2017 அன்று வெளியிடப்பட்டது .

இதுபோலவே குரூப் 2 மற்றும் குரூப் 4 பல தேர்வுகளுக்கு FINAL answer key இறுதி முடிவுகள் இதுவரை வெளியிடவில்லை இதுவே தொடர்கிறது ..

கீழ்கண்ட இணையதளத்தில் நீங்களே தேடி பார்க்கலாம்

https://www.tnpsc.gov.in/English/answerkeys.aspx

தேர்வு முடிவுகள் tentative answer key வெளியிடுவதும் , சரியான விடைகளை அதாவது FINAL answer key 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் கழித்து வெளியிடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

எப்படி தில்லுமுல்லு நடக்கிறது என்பதை இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்..

TNPSC யின் இத்தகை அறமற்ற செயலால் தேர்வை சிறப்பாக எழுதியவர்கள், உண்மையாக படித்தவர்கள், பாதிக்கப்படுகிறார்கள்..

மேலும்அடுத்த தேர்வு எழுத குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும்..

கேள்வித்தாளில் சரியான முறையில் எடுப்பது கிடையாது அதற்கான விடைகளும் சரியாக வெளியிடுவது கிடையாது ஆனால் யுபிஎஸ்சி தேர்வாணையத்தை விட நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்..

Tentative answers key,TNPSC EXPERT team, final answers key என்ற மூன்று கட்டுக்கதைகளை உருவாக்கி ஒட்டு மொத்த மாணவர்களில் உழைப்பையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

சரி இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று பார்த்தால் நீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பல மாணவர்கள் தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் பொதுவாக நீதிமன்றத்தை நாட பயப்படுவார்கள் தன்னுடைய வருங்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ அல்லது தேர்வு எழுதாமல் ஆக்கி விடுவார்களோ என்று பல குழப்பங்கள் அடைவார்கள்..

வழக்குப் போட்டு நாம் வெற்றி பெற முடியுமா? அதற்கு பணம் என்னிடம் இல்லையே என்று ஏராளமான கவலைகள் உண்டு..

மாணவர்களின் இயலாமையும் பணம் படைத்தவர்களின் அறம் தவறிய செயல்களும் , தேர்வாணையத்தின் மெத்தன போக்கும் மாணவர்களின் கனவை தொடர்ந்து சிதைத்து கொண்டே இருக்கிறது .

அவசர அவசரமாக தவறான கேள்விகளுக்கு சரியான விடையும் தெரிவிக்காமல் இறுதி முடிவையும் அறிவித்துவிட்டு வழக்கு தொடர்ந்தால் இவர்கள் வெற்றி பெற தகுதியற்றவர்கள் என்று மாணவர்களை மனதளவில் பாதிப்படைய செய்து வெளிப்படை அற்ற இவர்களது நிர்வாகம் தொடர்கிறது..

பல வருடமாக இவர்கள் செய்வது ,

நடத்தும் தேர்வில் ஏதும் தவறுகள் இருந்தால் அதன்பின்பு tnpsc expert committee உருவாக்கப்பட்டு அதன் படி இறுதி முடிவை வெளியிட்டு விட்டோம் என்று தப்பித்துக் கொள்கிறார்கள்..

தொடர்ந்து கேள்வித்தாளில் எழுத்துப் பிழைகளும் ,தமிழில் ஒரு விதமாகவும் ஆங்கிலத்தில் ஒரு விதமாகவும் கேள்விகள் அமைகிறது ..நீதிமன்றம் எச்சரித்தும் இவர்கள் அதனை முழுமூச்சுடன் செயல்படுத்துவது கிடையாது..

2019 நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் கிட்டத்தட்ட 26 கேள்விகள் தவறாக இருந்தது அதனை TNPSC தேர்வாணையம் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளது..வழக்கு தொடர்ந்த நபரைதேர்வு எழுதி தேர்ச்சி பெற தகுதியற்றவர் என்று மனதை நோகடிக்க செய்தது அல்லாமல் வழக்கையும் நிராகரித்தது..

நிற்க ...

இக்கட்டுரை தேர்வுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வாசிக்கலாம் அவர்களுக்கான வரிகள் இதோ

ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ண போறீங்க சும்மா குறை சொல்லிகிட்டே இருந்தா கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பீங்க என்று நீங்கள் குறை கூறலாம்...

அன்பானவர்களே எங்களுடைய வலி என்பது மிகக் கொடுமையானது . ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக வேண்டும் என்றுபல நாள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..

ஒன்னும் செய்ய வேண்டாம் நேரம் இருந்தால் கூகுளில் TNPSC ஊழல் என்று தட்டுங்கள் அதில் வரும் செய்திகளை ஒரு ஐந்து நிமிடம் வாசியுங்கள்

இதில் நடக்கும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு புரிய வரும்..தயவுசெய்து நேர்மையான முறையில் தேர்வு நடத்த உங்கள் தரப்பில் குரல் கொடுங்கள்..

கையில் ஒரு பத்து ரூபாய் இருந்தால் இதுவரை தமிழக அரசின் குரூப் 1 போன்ற உயர் பதவியில் எத்தனை வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள் என்று RTI யில் கேள்வி எழுப்புங்கள்..

மேலும் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு..

அப்புறம் தேர்வுக்கு கடுமையாக படித்து வருபவர்கள் இக்கட்டுரையை வாசிக்கலாம் கண்டிப்பாக சோர்வு அடைந்து விட்டுவிடாதீர்கள்..உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது உங்களுக்கான வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் நேர்மையான முறையில் தேர்வு நடக்கும் என்பதை மனதில் கொண்டு படித்துக் கொண்டே இருங்கள்...

மேலும் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு

இந்த நிர்வாக சீர்கேடுகளை நாம் பேசாத வரை தொடர்ந்து தவறுகள் நடந்து கொண்டேதான் இருக்கும் அதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்..

அதற்க்கு உங்களுடைய முகநூல் ,வாட்ஸ்அப் போன்ற பக்கங்களை பயன்படுத்துங்கள் இதுபோன்ற ஊழல் செய்திகள்,தவறான கேள்வித்தாள் உருவாக்குவது தலைப்புச் செய்தியாக இடம் பெறவேண்டும்..மீடியாக்கள் இதை கையில் எடுக்க வேண்டும்..பெரிய வாதமாக மாறவேண்டும் தேர்வாணையம் நேர்மையாக தேர்வு நடத்த எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்..

கண்டிப்பாக நாம் நினைத்த மாற்றம் உருவாகும் என்று நம்புகிறேன்..

உங்களில் ஒருவனாக

செல்வ ராம ரத்னம்.கு

Mail I'd :iasrathnam1@gmail.com
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL