12 ராசிக்குமான வாரப் பலன்கள் (ஏப்.9 - 15) - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, April 10, 2021

12 ராசிக்குமான வாரப் பலன்கள் (ஏப்.9 - 15)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 09 - ஏப்ரல் 15) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களை அனைவரும் பாராட்டும் படியாக நடந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பொருளாதாரம் உயரும். வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராகுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். குறித்த நேரத்தில் அனைத்துப் பணிகளையும் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தற்போது செய்யாமலிருப்பது நல்லது. வருமானம் சற்று உயரும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் மேன்மையுறும். மகசூல் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் பதவியைப் பாதுகாத்துக்கொள்ள போராடுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை அனைவரிடமும் பகிராதீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். பெண்மணிகள் கணவரின் உடல்நிலை சரியில்லாமல் அவரை கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. மாணவமணிகள் சற்று பொறுமையுடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 09, 10.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பேச்சை சக ஊழியர்கள் கேட்கமாட்டார்கள். அனைவரிடமும் அனுசரித்து நடப்பது மேன்மை தரும். வியாபாரிகள் புதுப் புது கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்துவீர்கள். விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் வீண் வம்பு சண்டைக்குப் போக நேரிடும். ஜாக்கிரதையாக விலகி வந்து விடுவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் பக்தியுடன் ஈடுபடுவீர்கள். மனதைக் கட்டுப்படுத்த யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வருவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் சந்தோஷம் அடைவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகள் நண்பர்களுடன் வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் நேரத்தைச் செலவழிக்கவும்.

பரிகாரம்: "நாராயணீயம்' பாராயணம் செய்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 09, 11.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கும். குடும்பத்தில் சற்று குழப்பம் நிலவும். வரவேண்டிய பணம் சற்று தாமதமாக வந்து சேரும். பெற்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வருமானம் சற்று உயரும். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். ஆனாலும் கூட்டுத்தொழில் அவசியமற்றது. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய குத்தகை பாக்கிகளை அடைத்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படும்படி கடுமையாக உழைப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவு உற்சாகம் தரும். கலைத்துறையினர் எடுத்த பணிகளை முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த வருமானம் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களைப் படிப்பீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 11.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் புத்திசாலித்தனத்தால் அனைத்து இடையூறுகளையும் சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். முக்கியமான முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சிரமப்பட்டு முடித்துவிடுவீர்கள்.

பணவரவு எதிர்பார்த்த வகையில் இருக்கும். வியாபாரிகளுக்கு கடன் வாங்க நேரிடும். அகலக்கால் வைக்க வேண்டாம். வியாபாரத்தை நேரடிப்பார்வையில் கவனித்துக் கொள்ளவும். விவசாயிகள் கால்நடைகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். மகசூல் சற்று லாபம் குறைவாகக் காணப்படும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படும்படி பொறுப்பாக நடந்து கொள்ளவும். தொண்டர்களின் ஆதரவில் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அசாதாரணமான நிலைமை காணப்படும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 12.

சந்திராஷ்டமம்: 09.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் இல்லத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் பழகும்போது பார்த்து பழகவும். உங்கள் உடன் பணிபுரி
பவர்களின் அன்பில் அகமகிழ்ந்து போவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும். கூட்டுக் குத்தகைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

பெண்மணிகள் மூத்த சகோதரர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். மாணவ
மணிகள் கேளிக்கைகளில் நாட்டம் செலுத்தாமல் கல்வியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 09, 13.

சந்திராஷ்டமம்: 10, 11.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

புதிய நபர்களின் பேச்சுகளை நம்பவேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உங்களின் திறமைகள் வெளிப்படும். எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் புதிய ஆசை தோன்றும்.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும் நேரம் இது. உங்களின் கருத்துக்களுக்கு மேலதிகாரிகளிடம் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். விவசாயிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்காகக் குரல் கொடுப்பீர்கள். உங்களது சுற்றுலாப் பயணம் சிறப்பாக நடந்தேறும். கலைத்துறையினர் தங்களின் முத்திரையைப் பதிக்க முயற்சி செய்வார்கள். சவால்கள் நிறைந்த பணிகளை ஏற்று சமாளித்து திறமையை நிரூபிப்பார்கள்.

பெண்மணிகள் விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிகாலையில் எழுந்து படிக்கவும்.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 09, 15.

சந்திராஷ்டமம்: 12, 13, 14.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்கவும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொண்டு நன்மைகளை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் சற்று குறைவாக இருக்கும். எவரையும் நம்பி கல்லாப்பெட்டியில் உட்கார வைக்காதீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வருமானம் சற்று கூடும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து கட்சியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கலைத்துறையினர் புது ஒப்பந்தங்களால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். சக கலைஞர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். மிகுந்த செலவினங்கள் மனக் கவலையை அதிகரிக்கும். மாணவமணி
களின் கோரிக்கைகள் அனைத்தும் பெற்றோர்களால் நிறைவேற்றப்படும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 11, 12.

சந்திராஷ்டமம்: 15.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திட்டமிட்டபடி வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் மனம் கோணாமல் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் புதுப்புது தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு செயல்படுவீர்கள். கடன் வாங்காமல் வியாபாரம் செய்யப் பழகுங்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். கால்நடைகளால் நல்ல லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தகவல்களைப் பரிமாறும் பொழுது தகுந்த கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். இதனால் சில பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் சற்று கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிவரும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: திருப்போரூர் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 14.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செய்தொழிலில் கரடு முரடான பாதைகளைச் சந்திக்க நேரிடும். ஆனாலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வீர்கள். உற்றார்
உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் தங்களின் கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை. உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். அதிகமான விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கும். அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு மதிப்பு மரியாதை உயரும். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு சற்று தாமதமாகும்.

பெண்மணிகள் அனைவரிடமும் வெளிப்படையாகப் பேசாதீர்கள். தகுந்த நேரத்தில் உணவு, உறக்கம் கொள்ளப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டுப் படிப்பு தொடர்பாக முயற்சி எடுப்பீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 13, 14.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் இருந்த சிரமங்களும் தடைகளும் விலகும். அரசு வழியில் சிறு கெடுபிடிகளைச் சந்திப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். உங்கள் கோரிக்கைகளை மேலதிகாரிகள் நிறைவேறாமல் போகலாம். மனம் தளராதீர்கள். வியாபாரிகள் புதுப்புது விற்பனை யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் மேம்படுத்துவீர்கள். நல்ல வருமானத்தையும் காண்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். தானிய உற்பத்தி சீராக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதுப்புது பயணங்களை மேற்கொண்டு பலனடைவீர்கள். மேலிடத்தின் பாராட்டு மழையில் நனைவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து அவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

பெண்மணிகள் அமைதியுடன் இருந்து அனைவருடனும் நல்லுறவு பேணுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் ஆரோக்கியமாக இருக்க உடற் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அதிகாலையில் எழுந்து படிக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 12, 15.

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


பண வரவு சற்று குறைவாக இருக்கும். உங்கள் பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பொறுமை மிக அவசியமாகிறது. யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடியில் சிக்கிக் கொள்வீர்கள். பொறுமையுடன் இருங்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெருக்குவீர்கள். யாருக்கும் கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு கிடைக்கும். யாருக்கும் குறைந்த விலையில் கொடுக்காதீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துணிந்து செய்யும் வேலைகளில் அதிக கவனம் தேவை. அனைத்துப் பணிகளையும் தகுந்த நேரத்தில் முடித்து நற்பெயர் எடுப்பீர்கள்.

பெண்மணிகளுக்கு உங்களின் வீண் யோசனைகள் வலிமையைக் குறைத்து விடும். மாணவமணிகள் நினைத்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள். கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிவரும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 14, 15.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வெளியூரில் பணிபுரிந்து கொண்டிருந்த தம்பதிகள் இணைந்து ஒரே இடத்தில் பணி புரியும் காலம் அமையும். குலதெய்வ வழிபாட்டை நடத்துவீர்கள். உங்களின் விடாமுயற்சியால் சில பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களின் புதுப்புது சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். மேலதிகாரிகளின் நல் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தைகளில் தங்கள் பொருள்களை விற்பனை செய்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கும். மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். உஙகள் செயல்பாடுகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளை வாங்க நேரிடும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 13, 15.

சந்திராஷ்டமம்: இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad