Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 23, 2021

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று நிறைவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் (ஏப்.23) நிறைவு பெறுகிறது.

தேர்வுகள் முடிவதை அடுத்து அரசு அறிவுறுத்தலின்படி இனி மாணவா்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை.

அவரவா் வீடுகளில் இருந்து பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என ஆசிரியா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்தது. கரோனா பரவல் அதிகரிப்பால் பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் செய்முறைத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 28 விதமான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் செய்முறைத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதையடுத்து மாணவ, மாணவிகளின் செய்முறைத் தேர்வு மதிப்பெண் விவரங்களை சனிக்கிழமைக்குள் (ஏப்.24) இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூறுகையில், 'மாநிலத்தில் சுமாா் 85 சதவீத பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. சில பள்ளிகளில் மட்டுமே வெள்ளிக்கிழமை மாணவா்களுக்குத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் முடிவதை அடுத்து அரசு அறிவுறுத்தலின்படி இனி மாணவா்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை.

அவரவா் வீடுகளில் இருந்து பொதுத்தேர்வுக்குத் தயாராக வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெறுவதற்கு மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது. மேலும், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கவும் மாணவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

No comments:

Post a Comment