மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஹரியாணா அரசு அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, April 21, 2021

மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஹரியாணா அரசு அறிவிப்பு

மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றது.

அதன்படி, ஹரியானாவில் ஏப்ரல் 22 முதல் மே 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று ஹரியாணாவின் கல்வி அமைச்சர் கன்வர் பால் புதன்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறுவது,

முன்னதாக 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்ததையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளை தயாரிக்கப் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

மாணவர்களைப் பாதுகாப்பதோடு, ஆசிரியர்களின் பாதுகாப்பதும் முக்கியமானது. எனவே இந்தாண்டு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

ஹரியாணாவில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்.20-ம் தேதி நிலவரப்படி ஒருநாள் பாதிப்பு 7,811 ஆகப் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் 35 பேர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 50,000க்கும் அதிகமாக மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad