Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 22, 2021

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-'பி', மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு அலுவலகங்களில், ஒரே நேரத்தில் 50 சதவீத, குரூப்-B மற்றும் குரூப்-C பிரிவு ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் எனவும் புதுச்சேரி அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், குரூப் 'A' பிரிவு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். இந்த உத்தரவு வரும் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், தேர்தல் பணி, கொரோனா தடுப்பு பணி மற்றும் அத்தியாவசிய பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment