Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 8, 2021

இன்னும் இரண்டு நாட்கள் தான்.. மீண்டும் அமலாகிறது அதிரடி ஊரடங்கு..!

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் பலியான நிலையில், 1824 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்திருந்தாலும், பிரச்சார கூட்டங்களில் மக்களின் அலட்சியம் காரணமாக ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதனையடுத்து, தமிழக மக்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மக்கள் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. மக்களின் பொருளாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டு, எளிய வகையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

கடந்த ஊரடங்கை போல தேவையான இடங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை ஏதும் இருக்காது என்றும், சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற தகவலும் தெரிய வருகிறது.

இதனைப்போன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும், நீச்சல் குளங்கள், கடற்கரை, தீம் பார்க், அருங்காட்சியகங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவைக்கு மக்கள் செல்ல தடை இருக்கலாம் என்றும் தெரியவருகிறது. இந்த ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகள் கொண்ட அறிவிப்பு இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்கள் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment