Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 19, 2021

இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதைச் செய்யுங்கள்

நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் உடலுக்கு ஓய்வு என்பது அவசியம். அந்த வகையில் இரவில் நிம்மதியான ஆழந்த உறக்கமே அடுத்த நாள் நம் உடலை சரியாக இயங்கச் செய்யும்.

இன்று மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் தூக்கத்தைத் தொலைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிந்தவரை இரவில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு முறையான உணவுப்பழக்க முறைகளை மேற்கொண்டால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

நம் உடல் மற்றும் மன செயல்பாடுகள் அனைத்திற்கும் உணவுப் பழக்கமுறையே மிக முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நாம் ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர்.

இரவில் தூக்கத்திற்கு முன்னர் கீழ்குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும்.

► இரவில் தூங்குவதற்கு முன் பால் குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நிம்மதியான தூக்கத்தைப் பெறவே முன்னோர்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

► பாலில் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அருந்தலாம்.

► பாதாம் பால் உடலுக்கு ஊட்டச்சத்துடன் நல்ல தூக்கத்தையும் தரக்கூடியது.

► நல்ல தூக்கம் பெற இரவில் டீ குடிக்கலாம், ஆனால் காபி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இஞ்சி டீ குடிப்பதால் இரவு சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.

► நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க வைத்து இறுதியில் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

► இரவில் கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும். காலை, மத்திய உணவை விட இரவில் குறைவாகவே சாப்பிட வேண்டும். ஆனால் கண்டிப்பாக சாப்பிடாமல் படுக்கச் செல்லக்கூடாது.

►இரவில் குறைந்தது 10 மணிக்குத் தூங்கி காலையில் 4 அல்லது 5 மணிக்கு எழுவதற்கு முயற்சி செய்யுங்கள். தூக்கத்தை கெடுக்கும் மின்னணு சாதனங்களில் பயன்பாட்டை இரவு நேரத்தில் தவிர்த்துவிடுங்கள்.

No comments:

Post a Comment