செரிமானம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கும் வரகு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, April 19, 2021

செரிமானம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கும் வரகு

சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச் சத்துகள், பொட்டாசியம் என அனைத்தையும் கொண்டுள்ளது. வரகு அரிசியின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அதாவது இது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது.

வரகு அரிசியானது சர்க்கரை நோயாளிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது, அதாவது இது ரத்தத்தில் உள்ள‍ ச‌ர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கச் செய்கின்றது. மூட்டுவலிப் பிரச்சினைகள், மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.

கண்புரை நோய்கள், கண் வீக்கம் என்ற கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது, மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது. மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மாதவிடாய்க் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad