Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 2, 2021

கற்பூரத்தின் மருத்துவ நன்மைகள்

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை.

கற்பூரத்தின் நன்மைகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும்.

குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை தெரியாமல் சாப்பிட்டால் வலிப்பு வரை கொண்டு சென்று விட்டு விடும். ஆதலால், குழந்தைகளுக்கு எட்டும் வகையில் கற்பூரத்தை வைக்கக் கூடாது.

குதிகாலில் வெடிப்பு இருந்தால், அதனை நீக்கும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. மேலும் வெடிப்புக்களால் ஏற்படும் வலியைக் குறைத்து வெடிப்புக்களை விரைவில் சரி செய்தும் விடும்.

கால்களில் ஆணி இருந்தால் சாதாரணமாக நடப்பது சற்று கடினம். இதனால் மிகுந்த கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இதனை சரி செய்ய கற்பூர எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.

மூக்கு அடைப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை கற்பூரம் அளிக்கிறது.

பேன் தொல்லை நீங்க கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி வந்தால், நல்ல பயன் கிடைக்கும்.

கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் ஜில்லென இருக்கும். எரிச்சல் நீங்கும்.

கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகும்

No comments:

Post a Comment