Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 28, 2021

அரசு ஊழியர்களுக்கு கசப்பான செய்தி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி அகவிலைப்படி உயர்த்தப்படும் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த முறையும் அகவிலைப்படி உயர்த்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2020 ஜனவரியிலும், 2020 ஜூலையிலும் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் 2021 ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும், அரசு ஊழியர்கள் அகவிலைப்படியின் முழுப் பலனையும் பெறத் தொடங்குவார்கள் என சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது.

இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியின் மூன்று தவணைகளும் 2021 ஜூலை 1 முதல் வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏழாவது ஊதிய கமிசன் விதிமுறைப்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 25 சதவீதமாக இருந்தால்தான் போக்குவரத்துச் சலுகை கிடைக்கும். ஆனால் இப்போது அகவிலைப்படி 17 சதவீதமாகவே உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment