Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 23, 2021

ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிங்க மருத்துவர்கள் பரிந்துரை

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்ற சர்ச்சை நீண்டுகொண்டே செல்கிறது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் தண்ணீர் அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வெயிட் லாஸ் செய்யச் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றனர் சிலர்... ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் (இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர்) அருந்தச் சொல்கின்றனர் சரும மருத்துவர்கள். இவ்வளவு குடித்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, இரண்டு முதல் இரண்டரை லிட்டர் ஓ.கே என்கின்றனர் நெஃப்ராலஜி மருத்துவர்கள்.

நம்முடைய உடலின் எடையில் கிட்டத்தட்ட 60 சதவிகிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது. உறுப்புக்களில் சிலவற்றில் 90 சதவிகிதம் வரை கூடத் தண்ணீர் இருக்கிறது. எனவே, மூளை, இதயம், தசை, சருமம், நுரையீரல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கத் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பொது மருத்துவர்கள். தண்ணீர்தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லவும், மூட்டுக்களுக்கு உராய்வு பொருளாகவும், அதிர்வைத் தாங்கும் பொருளாகவும் இருக்கிறது. இது மட்டும் அல்ல... இன்னும் ஏராளமான செயல்பாடுகளுக்குத் தண்ணீர் அத்தியாவசியமானதாக இருக்கிறது.

இதனால், ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், தண்ணீர் அருந்துவதைக் கணக்கிடும் நாம், நம்முடைய உணவிலும் தண்ணீர் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். காய்கறி, பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக நீர்க்காய்கறிகள், தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கிறது. தினசரி காய்கறி, பழங்களைச் சாலடாகச் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும். இதுதவிர நாம் அருந்தும் காபி, டீ, ஜூஸ் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும் ஒரு நாளைக்குத் தேவையான நீர்ச்சத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இதில் இருந்தே கிடைத்துவிடும். இதனுடன், இரண்டரை - மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்துக்குக் கூடுதல் வேலையைத் தரும்.

எனவே, மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, எந்தத் தெளிவும் இன்றித் தண்ணீர் அருந்த வேண்டாம். உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறுங்கள். என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனியுங்கள். இதைச் செய்தால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...

No comments:

Post a Comment