Monday, April 26, 2021

'உடற்பயிற்சி, தியானத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும்'

பள்ளிபாளையம் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோவிலில், அடிப்படை யோகா, தியான பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 

இதில், யோகா பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது: முடிந்தளவுக்கு நன்மை செய்ய வேண்டும். இது தான் மணித குணம். வாழ்க்கையில் சிக்கல், பிரச்னை வரும். அவற்றை சமாளிக்க வேண்டும். மனவளக்கலையில், மனதிற்கும், உடலுக்கும், உயிருக்கும் பயிற்சி உண்டு. 

இதை தினமும் செயதால், ஆரோக்கியமாக இருக்கலாம். மனமும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் கெட்ட பழக்க வழக்கங்களை ஒதுக்கிவிட்டு, நல்ல பழக்க வழக்கங்களை எடுத்து கொள்ள வேண்டும். எண்ணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆசைகளை சீரமைக்க வேண்டும். 

இது எல்லாம் பயிற்சிகள் மூலம் கொண்டு வரலாம். தினசரி சாப்பிடுகிறோம், குளிக்கிறோம். அதுபோல உடற்பயிற்சி, தியானத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment