Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 26, 2021

CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் பொதுத்தோ்வு வினாத்தாள்களில் புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள்களில் 30 சதவீதம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் 20 சதவீதம் வரையிலும் திறன் மதிப்பீடு வினாக்கள் இடம்பெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் அன்றாட வாழ்க்கை தொடா்பாக புதிய வகை திறன் மதிப்பீடு கேள்விகள் இருக்கும். அதே வேளையில் கொள்குறி வகை வினாக்களும் இடம் பெறும். இந்த புதிய மாற்றங்கள் வரும் கல்வியாண்டு ( 2021-2022 ) முதல் அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment