இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் !! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, April 10, 2021

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் !!

இன்று முதல் அமுலுக்கு வரும் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் இன்று முதல் செயல்பட தடை

வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி
உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி

வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி

ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி

இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி

தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி

பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை

நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகத்துக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.

சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad