Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 17, 2021

வாய் புண் விரைவில் குணம் பெற உதவும் மருத்துவ குறிப்புகள்

தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய் பால் பாதுகாப்பானது.

வாய் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும். வீட்டில் தயாரித்த ஹோம்மேட் பசு நெய்யைத் தடவி வருவது நல்லது. நாளடைவில் குணமாகும்.

மணத்தக்காளி கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கொஞ்சம் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கொடுக்கலாம். வாரம் 2-3 முறை கொடுப்பது நல்லது.

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தையாக இருந்தால், ஆர்கானிக், சுத்தமான தேனை புண்ணின் மேல் தடவலாம். 2 டீஸ்பூன் சாப்பிடவும் கொடுக்கலாம். சிறிதளவு மஞ்சளை சிறிது தேனுடன் கலந்து புண்களின் மேல் வைக்கலாம்.

இரண்டு டம்ளர் மோர் குடிக்க கொடுக்கலாம். ஒரு கப் தயிர் சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதமாக, தயிர் கிச்சடியாக கொடுப்பதும் நல்லது. வாய்ப் புண் விரைவில் சரியாகும்.

5-6 துளசி இலைகளைக் கழுவிய பின் மென்று தின்ன குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுப்பது நல்லது. காலை, மாலை சாப்பிட தரலாம். துளசி சாப்பிட்ட பின் இளஞ்சூடான தண்ணீர் கொடுக்கலாம்.

கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை நன்கு கழுவிய பின் அரைத்து புண்களின் மேல் தடவலாம். கற்றாழை, சிறிது பனை வெல்லம் சேர்த்து ஜூஸாக தினமும் வெறும் வயிற்றில் குடிக்க கொடுப்பது நல்லது. பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பதால் சளி பிடிக்காது.

No comments:

Post a Comment