தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி உத்தரவு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, April 7, 2021

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி உத்தரவு!

அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, கல்லூரி இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

அதே போல் அரியர் தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அனைவரும் தேர்ச்சி என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் அந்த அறிவிப்புக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அதே நேரத்தில் கல்வியாளர்கள் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து.

இதனால் அரியர் தேர்வு ரத்து என்று மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

1 comment:

  1. Exam should be conducted, Govt playing game on education,I will appreciate the court verdict

    ReplyDelete

Post Top Ad