Tuesday, April 13, 2021

அரிசி உணவுகள் மீது இருக்கும் கட்டுக்கதைகளை உடைக்கும் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர்..!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உடல் பருமனால் பலரும் ஏராளமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அடுத்து மருத்துவர்களின் தொடர் அறிவுரை காரணமாக பலரும் இன்று எடை குறைப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர உறுதியும், அர்ப்பணிப்பும் அதிகம் தேவைப்படுகிறது.

எடை குறைப்பின் போது ஏராளமான டயட்டுகள் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ரொட்டி அல்லது அரசி உணவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்போர் கட்டாயம் அரிசியை தவிர்க்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதே. ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. 

பல காரணிகளால் உதாரணமாக ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கூட உடல் எடை கூடும் நிலையில், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரசி உணவுகளை அளவாக சாப்பிடுவதால் எடை இழப்பு முயற்சிக்கு பாதிப்பு வராது. எடை குறைப்பு பயணத்தில் அரிசி பற்றி கூறப்படும் கட்டுக்கதைகளை உடைத்து, அரிசி சாப்பிடுவது உடலுக்கு எப்படி நன்மை செய்கிறது என்பது பற்றிய நிபுணர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் உள்ளன. இதில் உங்கள் பிராந்தியத்திற்குள் புழக்கத்தில் இருக்கும் உள்ளூர் அரிசி வகைகளை தயக்கமின்றி எல்லா சீசனிலும் சாப்பிடலாம். பிரவுன் அரிசி நீங்கலாக கைக்குத்தல் அரிசி அல்லது சிங்கிள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகள் உடலுக்கு சிறந்த நன்மைகளை தருவன.

இதனிடையே நடிகர்கள் கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களை தன் கஸ்டமராக கொண்ட பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஒரு சமூக ஊடக பதிவில் பகிர்ந்துள்ளார். அதில் " நீங்கள் ஐ.பி.எஸ்(IBS), மலச்சிக்கல் , வீக்கம், நீரிழிவு நோய், பி.சி.ஓ.எஸ், தைராய்டு, தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் அல்லது சோர்வு உள்ள ஒருவராக இருந்தால் அரிசியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்"என குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎஸ், மலச்சிக்கல் அல்லது வீக்கம்:

மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்கள் அரிசி உணவை சாப்பிட்டால் அது ஒரு பிரீபயாடிக்காக வேலை செய்து, குடல் மற்றும் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கும் சூழலை வழங்குகிறது.

நீரிழிவு நோய் , பி.சி.ஓ.எஸ் மற்றும் தைராய்டு:

மேற்காணும் உடல்நல கோளாறுகளை உடையவர்கள் பருப்பு வகைகள், காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக அரிசியை உணவில் சேர்த்து கொள்வது, அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பை மேம்படுகிறது. குறிப்பாக உடலில் வைட்டமின் B12, Hb மற்றும் D குறைவாக இருந்தால் அரிசியை எடுத்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சோர்வு:

இரவு உணவில் ரைஸ் பெஜ் அல்லது ரைஸ் சூப் சேர்த்து கொள்வது வயிறு மற்றும் நரம்புகளை சாந்தப்படுத்தி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஹார்மோன்களை கட்டுப்படுத்த, மனநிலையை மேம்படுத்த இந்த அரிசி கலந்த உணவு உங்களை அனுமதிக்கிறது. எனவே எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அறவே அரிசி உணவை தவிர்க்காமல், தேவையான அளவு பயமின்றி எடுத்து கொள்ளலாம். எடை குறைப்பில் ஈடுபடும் நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். இதற்கு வெளியில் சாப்பிடாமல் எப்போதும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு வருவதும் அவசியம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News