Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 25, 2021

ஜூலை 15ம் தேதி பிளஸ் 2 தேர்வு?

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது; பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு கூடி, பிளஸ் 2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யும். தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூன் 1ம் தேதி வெளியாகும்.

ஜூலை 15ல் துவங்கி, ஆக., 26க்குள் தேர்வு நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

கோரிக்கை : 'ஆகஸ்டில் தேர்வுகள் முடிந்து, செப்டம்பரில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். 'வெளிநாட்டு பல்கலைகளில் பயில்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் இழந்து விடுவர். அதனால், முன்னதாகவே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

No comments:

Post a Comment