Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 26, 2021

அரசு பணியில் நியமிக்கப்படும் நிரந்தர ஊழியர்களின் விகிதம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு!: காரணம் என்ன?

அரசு பணிகளில் நியமிக்கப்படும் நிரந்தர ஊழியர்களின் விகிதம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்திருக்கிறது. இதுகுறித்து என்.பி.எஸ். எனப்படும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் அமைப்பு அளித்துள்ள தரவுகளில், மத்திய அரசு பணிகளில் 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு 27 சதவீதம் அளவிற்கு குறைவாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களின் நியமனத்திலும் சரிவு நிலையே நீடிப்பதாக என்.பி.எஸ். தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட மாநில அரசின் நிரந்தர பணிகளில் 21 விழுக்காடு அளவிற்கு குறைவான ஊழியர்களே அமர்த்தப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2020ம் நிதியாண்டில் மத்திய அரசு பல்வேறு துறைகளில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேரை நியமித்திருந்தது. ஆனால் 2021ம் நிதியாண்டில் அது 87 ஆயிரத்து 423 ஆக சரிந்திருக்கிறது. மாநில அரசுகளை பொறுத்தவரை 2020ம் நிதியாண்டில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 52 நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நடப்பு நிதியாண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 7 ஆயிரமாக சரிந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா வைரஸின் 2ம் அலை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்காலிக அரசு பணிகளில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதால் நிரந்தர அரசு பணியாளர்களை நியமிப்பதில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment