Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 6, 2021

6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்

அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பெரும்பாலான தனியார் பள்ளிகள், தொடக்க வகுப்பில் இருந்தே, கணினி பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு பள்ளியில், ஒரு மாணவன் பிளஸ் 1 வகுப்பில்தான், கணினி அறிவியல் படிக்க முடிக்கிறது.

கடந்த, 2009ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 'ஆறு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கணினி அறிவியல் கொண்டு வரப்படும்' என அறிவித்தார். இதற்காக, கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக இருந்தது. ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கைகூடவில்லை.

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:

கடந்த 2011ல் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க தயாராக இருந்தன. ஆனால், இதை அ.தி.மு.க., அரசு நிராகரித்தது. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.கருணாநிதி அறிவித்தபடி, ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டு வர வேண்டும்; கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment