Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 10, 2021

முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் - தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம்கோரிக்கை

கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு, தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடுமாறு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் டி.ஆர்.ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு கைகொடுக்க முடிவு செய்துள்ளோம்.

கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும், மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கிலும், ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக, தமிழக முதல்வர் உரிய ஆணை பிறப்பிக்குமாறு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment