JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு தேர்வு பழைய முறையில் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதல் அலையின் போது மூடப்பட்ட கல்வி நிலையங்கள் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டன. ஆனால் 2ஆவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து மீண்டும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
பள்ளிகளை பொறுத்தவரை 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை நோய் பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த முறை பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நடப்பு செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7இல் விண்ணப்பித்து ஜூன் 12ஆம் தேதி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதேபோல் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை வரும் 7ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்ற கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment