Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 21, 2021

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார். 

வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதனடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள்.

மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையை கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.


இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம். 

மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment