JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்றும், ஏற்கனவே இருந்த +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த மத்திய அரசை வலியுறுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி பேசியது, மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம், மாநிலத்தில் தேர்வு நடத்திக் கொள்கிறோம் என்று கூறியதாக புரிந்து கொள்ளப்பட்டது.
இதற்கு பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அதுகுறித்த விளக்கம் ஒன்றை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அதில், தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி உறுதிபடத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment