Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 25, 2021

மாணவர்கள் கவனத்திற்கு.. எல்லாம் தயார்.. வெளியான முக்கிய தகவல்..

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கொரோனா முதல் அலை சற்று ஓய்ந்ததும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வேகமாக கொரோனா பரவியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து 11-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.. இந்த மாதம் நடைபெற இருந்த 12-ம் பொதுத்தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கான விற்பனை புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படும்..

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க 2.8 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மண்டல வாரியாக விரைவில் அனுப்பப்படும்.. பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது..

No comments:

Post a Comment