Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

சிபிஎஸ்இ, நீட், ஜேஇஇ தேர்வு குறித்து இன்று முக்கிய முடிவு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட பிற நுழைவுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இதே போல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட், பொறியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின், சிலாட் ஆகிய நுழைவுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்க அவர் கேட்டுக் கொண்டார். 

இதுதொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கருத்தையும் அமைச்சர் கேட்டு வருகிறார். இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடக்க இருப்பதாக அமைச்சர் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி ராணி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் உயர்மட்ட கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்’’ என்றார். 

இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு மற்றும் பிற தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment