JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 6, 2021

மொழிபெயர்ப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு உதவித்தொகை... செம்மொழி நிறுவனம் அறிவிப்பு

மொழிபெயர்ப்பு, முனைவர் பட்டம் மற்றும் மேலாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது.

1) மொழிபெயர்ப்பு வல்லுநர்களிடமிருந்து செம்மொழித் தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டம், மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம், திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

2) தகுதியுள்ள ஆய்வாளர்களிடமிருந்து முனைவர்‌ பட்ட, முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகைகளுக்கும் (2021-23) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய இறுதி நாள் 18.06.2021. விண்ணப்பப்‌ படிவம் மற்றும் இன்னபிற விவரங்களுக்கும்‌ நிறுவன இணையத்தைப் (www.cict.in) பார்க்கவும்

மேலும் தொடர்புக்கு:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,

சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம்
40,100 அடி சாலை, தரமணி,
சென்னை 600113.
தொலைபேசி : 044-22540125

No comments:

Post a Comment