உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 வகை பழச்சாறுகள்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, June 4, 2021

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 வகை பழச்சாறுகள்!

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம்மதியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள்.

தர்பூசணி ஜூஸ்

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜூஸ்

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

தக்காளி ஜூஸ்

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜூஸ்

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை ஜூஸ்

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப் பழ ஜூஸ்

கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

பெர்ரிப் பழ ஜூஸ்

பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன், இந்த ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad