JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்எஸ்பிஐ வங்கியில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டண விகித நடைமுறை நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதிக்கப்பட்ட நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் என்றும் அதற்குரிய ஜிஎஸ்டி எம் கட்ட வேண்டும் என்றும் எஸ்பிஐ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கும் மேல் செக் இதழ்களை பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த முறையும் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணங்களை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment