நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (Northern Coalfields Limited (NCL)) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 1500 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். ஜூன் 8 முதல் இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பும் நடைமுறை தொடங்கிவிட்டது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.nlcindia.in/ இல் ஜூலை 9 வரை விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு அல்லது 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 16 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேவையான கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
தேர்வு நடைமுறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



No comments:
Post a Comment