JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கை நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையில், " ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறாத நிலையில், மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு அல்லது காலாண்டு தேர்வில் எந்த மதிப்பெண் அதிகமாக எடுத்து இருக்கிறார்களோ அதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.
காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்க வேண்டும். தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் " என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை தலைமையாசிரியர்கள், பள்ளியின் முதல்வருக்கு தெரிவிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment