Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 27, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு மல்லி காஃபி பொடி


சுக்கு மல்லி காஃபி பொடியானது பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வகை மசாலா பானமாகும். இது சளி, இருமல், தொண்டை வலி, தலை வலி, அதிகப்படியாக டென்ஷன் போன்ற சமயங்களில் சுட சுட பாலின் கலந்து குடிக்க அனைத்தும் சரியாகும். இதை வீட்டில் தயாரிப்பதும் எளிதான காரியம்தான். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுக்கு - 15 கிராம்
மிளகு - 1 tsp
ஏலக்காய் - 3
மல்லி - 2 tsp

செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாகும் வரை மைய அரையுங்கள். அவ்வளவுதான் சுக்கு மல்லி காஃபி பொடி தயார்.

இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதை பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம். தண்ணீரில் கலந்தும் வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

இதைக் குடிப்பதால் சளி, இருமல், தொண்டை வலி குணமாகும்.

No comments:

Post a Comment