Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, June 13, 2021

பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

முதல்வர் அறிவிக்கும் போது பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நூலகங்களில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பாக கல்வி கற்க சூழல் உள்ளதா? கழிப்பறைகள் சரியாக உள்ளதா? வகுப்பறைகள், இருக்கைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஏதேனும் பிரச்னை இருக்கும் பட்சத்தில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டும் நீதிமன்ற வழிகாட்டுதல் படியே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும். காவல்துறை முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

12ஆம் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் உயர் கல்வி சேர்க்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிவு தெரியவரும். நீட் தேர்வு குறித்து குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு முதல்வர் பள்ளிகளை திறக்கலாம் என அறிவித்து விட்டால் பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment