JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கிராமப்புறங்களில் வசிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டிஜிட்டல்' வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி வசதி கிடையாது
தமிழக பெண்கள் இயக்கத்தின் செயலர் எஸ்.வாசுகி தாக்கல் செய்த மனு:அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, போதிய நிதி வசதி கிடையாது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக, அவர்களால், கணினி, மொபைல் போன் வாங்க முடியாது.தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தவறாமல் ஆன்லைனில் பயிற்சி பெறுகின்றனர்.
ஏழை, விளிம்புநிலை மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில், டிஜிட்டல் வகுப்பு அறைகளை, பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தகுதியானவர்களை நியமித்து, கண்காணித்து இருக்க வேண்டும்.எனவே, பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் கிராமப் புறங்களில், குடிசைப் பகுதிகளில், ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.
மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை அமைத்து, பள்ளி கல்வியை மாணவர்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முதல் பெஞ்ச்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment